Comments

இஸ்லாம்

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி..

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது – உயர் நீதி மன்றம் அதிரடி:

முஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்வரும் ஜனவரி 31ல் திருச்சியில் நடத்தவிருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவிடாமல் சில வதந்திகள் பரவும் நிலையில் அது குறித்த தெளிவை அறிய தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் இது குறித்த பல கேள்விகளையும் அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினரின் பதிலையும் இங்கே பதிவிடுகிறோம்.

மாநாடு எதற்காக ?

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை ஏன் நடத்துகிறீர்கள் ? சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆள் சேர்க்கவா ? பதில்:தவ்ஹீத் ஜமாஅத் என்ப்து அரசியல் கட்சியோ அல்லது தேர்தலில் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் சார்பு இயக்கமோ கிடையாது. எங்களுக்கு ஓட்டோ , சீட்டோ , நோட்டோ வேண்டாம் என நாங்கள் இருக்கிறோம். நாங்கள் மார்க்க மற்றும் மனிதநேயப்பணி செய்யும் அமைப்பாக இருந்தோம், தற்போதும் இருக்கிறோம்.அதன்படியே வெள்ள நிவாரணம் , தமிழக அளவில் அதிக இரத்ததான கொடையாளர்களைக்கொண்டு மனிதநேயப்பணியில் முதலிடம் வகிக்கிறோம் ,
ஷிர்க் ஒழிப்பு என்றால் என்ன?

தில்:ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று பொருள்.முஸ்லிம்கள் அதிகமானோர் அல்லாஹ்வை வணங்குவதாகச் சொல்லி விட்டு சமாதியில் வழிபடும் அவலத்தை மாற்றவே இந்த மாநாடு.

இந்த மாநாடு முஸ்லிம்களுக்கு மட்டும்தானா? பிறமதத்தவருக்கு இல்லையா ?

பதில்:இது முஸ்லிம்களுக்கு நடத்தப்படுவதால்தான் ஷிர்க் என்ற அரபு பதம் இடப்பட்டு மாநாடு நடத்துகிறோம்.முதலில் எங்க சமுதாயத்தை திருத்தனும் இல்லையா?. பிறமத்தவர்கள் வந்தால் வரவேற்போம்.

ஷிர்க் ஒழிப்பு என்றால் சிலை , சிலுவை வழிபடும் மக்கள் கோபித்துக்கொள்ளமாட்டார்களா?

பதில்:100 சதம் கோபிக்கவேமாட்டார்கள். இஸ்லாம் சிலை வழிபாட்டையும் சிலுவை வழிபாட்டையும் ஆதரிக்கவில்லை என்பதை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து கிறித்தவ நண்பர்களிடம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிவாயிலாக சொல்லியுள்ளோம்.இதுவரை எந்த இந்து கிறித்தவர்களும் எங்களிடம் வம்பு செய்ததில்லை.

மாநாட்டால் நீங்கள் அடையும் பலன் என்ன?

பதில்:முஸ்லிம்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு ஓர் இறையை மட்டும் வணங்கத் தொடங்கினால் அதுவே மாநாட்டின் பலன்.

மாநாட்டிற்கு செல்லக்கூடாது என ஜமாத்துல் உலமா கட்சி சார்பில் அனைத்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக செய்தி வருதே!

பதில்:அது அந்த இயக்கத்தின் லெட்டர் பேட் இல்லை.போலிகள் செய்த செட்டிங்.ஒரு வேலை  ஜமாத்துல் உலமாவின் கருத்தும் இதுவாக இருப்பின் அதுபற்றிய கவலை எங்களுக்கு இல்லை. ஏனெனில் ஜமாத்துல் உலமா எங்களை காபிர் (இறைமறுப்பாளன்) என்று இதற்கு முன்னர் கொடுத்த தீர்ப்பை எந்த முஸ்லிமும் அங்கீகரிக்கவில்லை.மாறாக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அலைகடலென வந்துகொண்டிருக்கினற்ர்.

இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டுமென சிலர் வழக்கு தொடர்வதாக செய்தி கசிகிறதே?

பதில்:உயர் நீதிமன்றமல்ல உச்ச நீதிமன்றமே வந்தாலும் மாநாட்டைத் தடுத்து நிறுத்து சட்டத்தில் முகாந்திரம் இல்லை. அதறகான காரணங்கள் பல இருக்கின்றனர். 1.மாநாடு முஸ்லிம்களுக்காகவே நடத்தப்படுவதால் மத மோதல் நடக்க முகாந்திரம் இல்லை., 2.மாநாடுப் பணி துவங்கி 6 மாதங்கள் அமைதி காத்துவிட்டு தற்போது தடைசெய்யக்கோருவது முட்டாள்தனம். 3.மாநாடு நடத்துவோர் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரைக்கொடுத்து உதவியவர்கள்.இவர்களது மாநாட்டால் எந்த இடையூறும் ஏற்படாது. 4.மாநாடு மூடநம்பிக்கைக்கு எதிராக நடப்பதால்  அதை ஆதரிப்பதே ஜனநாயகம். 5.மாநாட்டால் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவொருக்கும் பாடம் புகட்டப்படுவதால் பாமர மக்கள் நிம்மதி பெற வழி வகுக்கும். மேற்கண்ட காரணங்களால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடுக்க முடியாது என உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கும். அதையும் மீறி தடைபட்டால் மாநாட்டிற்கு அதிகமான ஆட்கள் சேரும்.அதுவும் எங்களுக்கு ஓகே.

மாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசிற்கு ஆபத்து வருமா ?

பதில்:முஸ்லிம்களின் மாநாடு தடுக்கப்பட்டால் ஆளும் அரசு முஸ்லிம் விரோத அரசு என்ற அவப்பெயரை  பெற நேரிடும். உங்கள் மாநாட்டை

நீங்கள் கைவிட கோரிக்கை வைக்கப்பட்டால் உங்கள் பதில் .?

பதில்:மாநாட்டை எதிர்ப்போர் திருந்தி உண்மை மார்க்கத்தை ஏற்றதாக அறிவித்தால் மாநாட்டை கைவிடத்த்யார்.

தவ்ஹீத் ஜமாத் தலைவர் அல்தாபி அவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதாக செய்தி வருதே? பதில்:மாநாடு கலைகட்டுவதற்கு இந்த வதந்தியே ஆதாரம். இருப்பின்ம் நீங்கள் கேட்க கேள்விக்கு பதில் வீடியோவில் இருக்கிறது.
காலை மலர். காம்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.